No results found

    அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி- டொனால்டு டிரம்ப்


    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.

    கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.

    இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال